இஎஸ்ஐ மருத்துவமனையில் இடிந்து விழுந்த மேற்கூரை: மயிரிழையில் உயிர் பிழைத்த நோயாளிகள்

இஎஸ்ஐ மருத்துவமனையில் இடிந்து விழுந்த மேற்கூரை: மயிரிழையில் உயிர் பிழைத்த நோயாளிகள்

சென்னையில் புறநகர் அரசு மருத்துவமனையில் பராமரிப்பு பணியின் போது திடீரென ஃபால் சீலிங்( மேற்கூரை) இடிந்து விழுந்ததால் நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர்.

சென்னை கே.கே நகர் அசோக் பில்லர் அருகே புறநகர் அரசு மருத்துவமனை (இஎஸ்ஐ) செயல்பட்டு வருகிறது.. இந்த மருத்துவமனையில் பொதுப்பணித்துறை சார்பில் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று மதியம் நோயாளிகள் இருந்த வார்டில் ஃபால் சீலிங் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அங்கிருந்த நோயாளிகள் பயந்து போன ஓட்டம் பிடித்தனர். மூன்றாவது மாடியில் உள்ள அறுவை சிகிச்சை அறையில் நடக்கும் புனரமைப்பு பணிகளின் காரணமாகவே இந்த விபத்து நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமோ, பாதிப்போ ஏற்படவில்லை, நோயாளிகள் இருந்த வார்டில் ஃபால் சீலிங் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் துறை ரீதியிலான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in