மாயமான மனைவிகள்… தேடிச் சென்ற கணவன்கள் அதிர்ச்சி: இலங்கையில் இரவு நேரத்தில் நடந்த பகீர்!

மாயமான மனைவிகள்… தேடிச் சென்ற கணவன்கள் அதிர்ச்சி: இலங்கையில் இரவு நேரத்தில் நடந்த பகீர்!

இலங்கையில் எரிபொருள் வாங்க இரவில் காத்திருந்த மூன்று பெண்கள் மாயமானார்கள்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. எரிபொருள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் எரிபொருள் வாங்க, எரிபொருள் நிலையங்களில் பகல் நேரங்களில் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி எரிபொருள் வாங்க வரிசையில் நின்ற மூன்று பெண்களைக் காணவில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் புத்தளம் பிரதேசத்தில் பெட்ரோலை பெறக் காத்திருந்த ஒரு பெண் கணவனை ஏமாற்றி விட்டு இன்னொரு இளைஞனுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிலாபம் பிரதேசத்தில் இரவு நேரத்தில் எரிபொருள் வரிசையில் இருந்த பெண், இளைஞர் ஒருவருடன் சில மணி நேரங்கள் வெளியே சென்றது தெரிய வந்தது. இதையறிந்த அப்பெண்னின் கணவனின் தாக்குதலில் அந்த இளைஞர் காயமடைந்தார்.
இதே போல எரிபொருள் வாங்க வரிசையில் நின்றிருந்த கணவனை அவரது மனைவி தந்திரமாக வீட்டுக்கு அனுப்பி விட்டு வரிசையில் நின்றுள்ளார். வீட்டுக்குச் சென்ற கணவன் மீண்டும் எரிபொருள் வரிசைக்குத் திரும்பி வந்த போது அவரது மனைவியைக் காணவில்லை. அவரைத் தேடிப் பார்த்த போது எரிபொருள் வாங்க வந்த இளைஞர் ஒருவருடன் இருந்தது தெரிய வந்தது. அங்கு சென்ற கணவன், மனைவியைத் தாக்கியதுடன் எரிபொருளை வாங்காமல் திரும்பிச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு சமூக ரீதியான பிரச்சினையாக மாறி வருவதாக போலீஸார் கவலைத் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in