'அப்பா இருந்திருந்தால் அதிகமாக சந்தோஷப்பட்டிருப்பார்’: நீட் தேர்வில் முதலிடம் பிடித்த அரசுப்பள்ளி மாணவி நெகிழ்ச்சி

'அப்பா இருந்திருந்தால் அதிகமாக சந்தோஷப்பட்டிருப்பார்’: நீட் தேர்வில் முதலிடம்  பிடித்த அரசுப்பள்ளி மாணவி நெகிழ்ச்சி

நீட் தேர்வில் நான் முதலிடத்தில் தேர்வானதைக் கேட்க அப்பா உயிரோடு இல்லை என மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஈரோடு மாணவி தேவதர்ஷினி தெரிவித்துள்ளார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டன.

மொத்தமாகப் பெறப்பட்ட 22,736 விண்ணப்பங்களில், 7.5 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டில் 2,695 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஈரோடு மாணவி தேவதர்ஷினி முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

இது குறித்து தேவதர்ஷினி கூறுகையில், “12-ம் வகுப்புவரை அரசு பள்ளியில் படித்தேன். அம்மா அங்கன்வாடி உதவியாளராக இருந்தார். அப்பா மாற்றுத் திறனாளி. இருவரும் அவர்களின் கஷ்டத்தைப் பொருட்படுத்தாமல் என்னைப் படிக்க வைத்தனர். அவர்களின் ஆசைக்காகவே நான் நீட் தேர்வில் கலந்து கொண்டேன். அரசு பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் நான் முதல் இடத்தில் தேர்வாகி இருக்கிறேன். இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கேட்க என்னுடைய அப்பா இப்போது உயிரோடு இல்லை. அவர் இருந்திருந்தால் என்னை விட மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். அதுதான் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது ” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in