பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: வேளாங்கண்ணி- எர்ணாகுளம் சிறப்பு ரயில் சேவை மேலும் நீட்டிப்பு!

ரயில்
ரயில்

தமிழகத்தின் வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளத்துக்கு  இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலின்  சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

தற்போது இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும்  ரயில் எண் 06035/06036 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் சேவை கீழ்க்கண்ட விவரப்படி  நீட்டிக்கப்பட்டுள்ளது.

எர்ணாகுளத்தில் இருந்து சனிக்கிழமைகளில் 13.10 மணிக்கு  புறப்பட்டு  தென்காசி, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக மறுநாள் 5.40 மணிக்கு  வேளாங்கண்ணி சென்று சேரும். ரயில் எண் 06035 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில், மார்ச் 04, 11, 18, 25  ஆகிய தேதிகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் 18.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும். ரயில் எண் 06036 வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில்   05, 12 ,19, 26 மார்ச், 2023 ஆகிய தேதிகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ரயில்களின் நேரம், நிறுத்தங்கள் மற்றும் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப் பட்டுள்ள நிலையில்  மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நடைபெற்றுவருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in