இந்தியாவை வென்று வாகை சூடிய இங்கிலாந்து: 5வது டெஸ்டை அதிரடியாக கைப்பற்றியது!

இந்தியாவை வென்று வாகை சூடிய இங்கிலாந்து: 5வது டெஸ்டை அதிரடியாக கைப்பற்றியது!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிர்மிங்காமில் இந்தியாவுக்கு எதிரான 5 வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா நிர்ணயித்த 378 ரன் என்ற இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. பிர்மிங்காமில் நடந்த 5 வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 416 ரன்களையும் இங்கிலாந்து அணி 284 ரன்களையும் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 245 ரன்களையும், இங்கிலாந்து 378 ரன்களையும் எடுத்தது.

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கெனவே இந்தியா 2 போட்டிகளிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றது. ஒரு போட்டி சமனில் முடிந்தது. கொரோனா காரணமாக அப்போது கைவிடப்பட்ட 5வது டெஸ்ட் போட்டி ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வென்றதால் இந்த டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது.

டெஸ்ட் போட்டியின் 4-வது நாளில் இந்தியா 245 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு இங்கிலாந்துக்கு 378 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி திங்கள்கிழமை ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய ஜோ ரூட் 142 ரன்களையும், ஜானி பார்ஸ்டோவ் 114 ரங்களையும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in