இங்கிலாந்து மகாராணி எலிசபெத் காலமானார்; மன்னரானார் மகன் சார்லஸ்

இங்கிலாந்து மகாராணி எலிசபெத் காலமானார்; மன்னரானார் மகன் சார்லஸ்

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 96.

இங்கிலாந்து பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தவர் மகாராணி இரண்டாம் எலிசபெத். உடல்நலக்குறைவு காரணமாக ஸ்காட்லாந்தில் உள்ள பண்ணை வசித்துவந்த எலிசபெத்தை மருத்துவக்குழு கண்காணித்து வந்தது. இந்நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவக்குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்றிரவு மகாராணி எலிசபெத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, எலிசபெத் மறைவை தொடர்ந்து இளவரசர் சார்லஸ் இங்கிலாந்து மன்னரானார். பிரிட்டன் தேசிய கீதம் God Save the Queen என்பதில் இருந்து God Save the King என மாற்றப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in