டி 20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அபார பந்துவீச்சு: 137 ரன்களுக்குள் சுருண்ட பாகிஸ்தான்

டி 20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அபார பந்துவீச்சு: 137 ரன்களுக்குள் சுருண்ட பாகிஸ்தான்

டி 20 கிரிக்கெட் உலக்கோப்பை இறுதிப்போட்டியில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு பாகிஸ்தான் 137 ரன்கள் எடுத்துள்ளது. 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி டி20 கிரிக்கெட் உலகப்கோப்பை இறுதிப் போட்டியில் இன்று பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மோதின. இந்திய நேரப்படி 1.30 மணிக்கு மெல்போர்னில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் களமிறங்கினர். ரிஸ்வான் 15 ரன்களில் சாம் கரண் பந்தில் போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த ஹாரிஸ் 8 ரன்களில் ரஷீத் பந்தில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து மசூத் களமிறங்கி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். ஸ்கோர் 84 ஆக இருந்த நிலையில் சிறப்பாக ஆடி வந்த கேப்டன் பாபர் அசாம் 32 ரன்களில் அவுட் ஆனார். அவர் ரஷீத் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய இப்திகார் டக் அவுட் ஆனார். இதனால் பாகிஸ்தான் அணி 85 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அடுத்து ஷதாப் கான் களமிறங்கி சற்று அதிரடி காட்டினார். இருப்பினும் 20 ரன்களில் அவர் ஜோர்டன் பந்தில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த நவாஸ் 5 ரன்களில் சாம் கரண் பந்தில் லிவிங்ஸ்டோன் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து வந்த வாசிம் 4 ரன்களில் வெளியேறினார். அவர் ஜோர்டன் பந்தில் லிவிங்ஸ்டோனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இதனையடுத்து வந்த ஷாகீன் அப்டிரி 5 ரன்களிலும், ரவுஃப் 1 ரன்னிலும் இருக்கும்போது பாகிஸ்தான் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில், சாம் கரண் 3 விக்கெட்களையும், ரஷீத் மற்றும் ஜோர்டன் தலா 2 விக்கெட்களையும், ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங்கைத் தொடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in