2 வருட காதலை பிரேக் அப் செய்த காதலி: இளம்பெண் வீட்டு முன்பு உயிரை மாய்த்த பொறியாளர்!

2 வருட காதலை பிரேக் அப் செய்த காதலி: இளம்பெண் வீட்டு முன்பு உயிரை மாய்த்த பொறியாளர்!

காதல் தோல்வியால் காதலி வீட்டு முன்பு காதலன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், டி.காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் கோவில்பிச்சை(51). இவரது மகன் தேவகுமார்(24). பொறியியல் பட்டதாரியான இவர் துபாயில் வேலை செய்துவந்தார். தேவகுமார் அவரது ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார். இதை அவர் தனது குடும்பத்தினரிடம் சொல்ல அவர்களும் சம்மதித்தனர். இந்நிலையில் அந்தப் பெண் தேவகுமாரோடு காதலை திடீர் என பிரேக் அப் செய்தார். இதனால் தேவகுமார் கடும் மன உளைச்சலில் இருந்தார்.

இந்நிலையில் துபாயில் இருந்து ஊர் திரும்பிய தேவகுமார் இதுகுறித்து தன் தந்தையிடம் சொல்லியிருக்கிறார். மேலும் தன் காதலியை நேரில் போய்ப் பார்த்தும் இதுகுறித்துப் பேசினார். ஆனால் காதலி சம்மதிக்கவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சல் ஆன தேவகுமார் நேற்று மாலை பெட்ரோல் கேனுடன் தன் காதலியின் வீட்டு முன்பு தீக்குளித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட தேவகுமார் நேற்று நள்ளிரவு உயிர் இழந்தார்.

காதல் தோல்வியால் பொறியாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in