காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்ற நண்பர்: இன்ஜினியரைத் தாக்கி நிர்வாண வீடியோ எடுத்த கும்பல்

காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்ற நண்பர்: இன்ஜினியரைத் தாக்கி நிர்வாண வீடியோ எடுத்த கும்பல்

பொங்கல் விடுமுறைக்காக சென்னையில் இருந்து வீடு திரும்பிய இன்ஜினியரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து பணம் பறித்து நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து கொலை மிரட்டல் விடுத்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

ராமேஸ்வரம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் சிவஞானம் (25). பி.இ பட்டதாரியான இவர், சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பொங்கல் விடுமுறையையொட்டி வீடு திரும்பினார். இணைய தள கணக்கு தொடங்கி பார்த்து வந்தார். இதன் மூலம் பழகிய நண்பர் ஒருவர் இவரை ஓரினச்சேர்க்கை்கு அழைத்தார்.

இதன்படி, ஜன.20ம் தேதி, மண்டபம் அருகே உள்ள வேதாளை பஸ் நிறுத்தம் வந்தார். அங்கு காத்திருந்த நண்பர் அவரை ஆட்கள் நடமாட்டமில்லாத இடத்திற்கு செல்வோம் எனக்கூறி வேதாளை வடக்கு கடற்கரைக்கு இரு சக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றார்.

அங்கு ஏற்கெனவே நின்ற 5 பேரும் சிவஞானத்தை தாக்கினர். சிவஞானம் சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.1,000, கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் செயின், வெள்ளி மோதிரம் ஆகியவற்றை முதலில் பறித்தனர். இதன்பின்னர் அவரது செல்போன், 2 ஏடிஎம் கார்டுகளை பிடுங்கினர். ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை வற்புறுத்தி வாங்கினர்.

அந்த எண்ணை பயன்படுத்தி சிவஞானத்தின் 2 வங்கி கணக்குகளில் இருந்த ரூ.16 ஆயிரத்தை எடுத்தனர். மேலும் மிரட்டல் விடுத்து வீட்டில் இருந்து வங்கிக் கணக்கில் போடச் சொல்லி துன்புறுத்தினார். வலி தாங்க இயலாத சிவஞானம், அண்ணன் மூலம் ரூ.20 ஆயிரம் போடச் சொன்னார்.

அந்த பணத்தையும் அக்கும்பல் எடுத்துக்கொண்டு சிவஞானத்தை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்தனர். இதன்பின்னர், அவரது செல்போன், ஏடிஎம் கார்டுகளை சிவஞானத்திடம் கொடுத்தனர். இங்கு நடந்ததை வெளியே சொன்னால் நிர்வாண வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவோம் என மிரட்டினர்.

இதையடுத்து அவர்களில் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் ஏற்றி வந்து வேதாளை பஸ் நிறுத்தத்தில் சிவஞானத்தை இறக்கி விட்டுச் சென்றார். இது குறித்து சிவஞானம் போலீஸிசில் புகார் அளித்தார். இதனடிப்படையில், மண்டபம் போலீஸார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத 6 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in