மனைவி கண்ணெதிரே மென்பொறியாளர் நீரில் மூழ்கி பலி: மாமனார் ஊருக்கு தலைப்பொங்கலுக்கு வந்தபோது சோகம்!

மனைவி கண்ணெதிரே மென்பொறியாளர் நீரில் மூழ்கி பலி: மாமனார் ஊருக்கு தலைப்பொங்கலுக்கு வந்தபோது  சோகம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் தலைப் பொங்கல் கொண்டாட மாமனார் வீட்டிற்குச் சென்றவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக் களைகட்டியுள்ளது. சீர்வரிசைப் பொருள்களை புதுமணத் தம்பதிகளுக்கு கொடுக்கும் கலாச்சாரமும் களைகட்டி உள்ளது. தம்பதிகள் வெளியூரில் இருந்தாலும், தலைப்பொங்கலுக்காக சொந்த ஊர் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், தலையால் நடந்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் மகாராஜன்(28) இவர் சென்னை ஐஐடியில் மென்பொறியாளராக உள்ளார். இவருக்கும், நொச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த சத்தியபிரபா என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இது தம்பதிகளுக்கு தலைப் பொங்கல் என்பதால் பொங்கலைக் கொண்டாட சென்னையில் இருந்து மாமனார் வீடான நொச்சிகுளத்திற்கு மகாராஜன் வந்து இருந்தார்.

இந்நிலையில் நேற்றுமாலை நொச்சிகுளம் பகுதியில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக மகாராஜன், தன் மனைவி சத்திய பிரபாவோடு சென்றார். அப்போது திடீர் என மகாராஜன் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். மீண்டுவர முடியாத நிலையில் மனைவி கண்முன்பே மகாராஜன் நீரில் மூழ்கி உயிர் இழந்தார். அப்பகுதியினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தலைப் பொங்கல் பண்டிகை கொண்டாட வந்த புதுமாப்பிள்ளை நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in