சோனியா, ராகுலுக்கு அமலாக்கத்துறை திடீர் சம்மன்... என்ன காரணம்?

சோனியா, ராகுலுக்கு அமலாக்கத்துறை திடீர் சம்மன்... என்ன காரணம்?

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை யங் இந்தியா அசோசியேட் நிறுவனத்திற்கு மாற்றியதில் முறைகேடு என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இதனையடுத்து நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்தநிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் தலைவர்கள் பவன்குமார் பன்சால் உள்ளிட்டோரை விசாரித்த நிலையில் இவர்கள் இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in