பாலமேடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்: தமிழரசனுக்கு முதல்வர் வழங்கிய சூப்பர் பரிசு

கார் பரிசு பெற்ற தமிழரசன்.
கார் பரிசு பெற்ற தமிழரசன்.

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 23 காளைகளைப் பிடித்த சின்னப்பட்டி தமிழரசனுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சார்பில் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 9 சுற்றுகளாக நடந்த போட்டியில் 877 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 345 மாடுபிடி வீரர்கள் களமிறங்கி காளை அடக்கினர்.

இதில் நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் சிவக்குமார், காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 31 பேர் காயமடைந்தனர். 9 காளைகளை பிடித்து மூன்றாம் இடத்தில் இருந்த பாலமேடு வீரர் அரவிந்தராஜ், காளைமுட்டி குடல் சரிந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இப்போட்டியில் 23 காளைகளைப் பிடித்த சின்னப்பட்டி தமிழரசனுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சார்பில் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது. 19 காளைகளைப் பிடித்த பாலமேடு மணி இரண்டாம் இடம் பிடித்தார். அவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் ரெங்கராஜபுரம் கருப்பண்ணசுவாமி கோயில் காளையின் உரிமையாளருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் பைக் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் மானூத்தைச் சேர்ந்த மணியின் காளை இரண்டாவது பரிசு பெற்றது. அந்த காளையின் உரிமையாளருக்கு பொன் குமார் சார்பில் பசுவும், கன்றும் பரிசாக வழங்கப்பட்டது. அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in