பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு ரத்து: தமிழக அரசு திடீர் அறிவிப்பு!

பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு ரத்து: தமிழக அரசு திடீர் அறிவிப்பு!

பள்ளிகளிலேயே மாணவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவை மேற்கொள்ளும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது வேலை வாய்ப்பிற்காக தங்களது கல்வித் தகுதியை, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் நடை முறை இருந்து வந்தது. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்ததும் அந்த பள்ளி வளாகத்திலேயே இணையத்தின் மூலமாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் நடைமுறை இருந்து வந்தது.

இந்த நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் நடைமுறையைக் கைவிடுவதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது. தமிழக முதல்வருடன் நடைபெற்ற ஆலோசனை மூலமாக இந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய விருப்பமுள்ள மாணவர்கள் https:tnvelaivaipu.gov.in என்ற இணையதளம் மூலமாகப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பதிவுகள் புதுப்பித்தல், கூடுதல் பதிவு ஆகியவற்றையும் இணையதளத்தில் வாயிலாகவே பதிவு செய்து கொள்ளலாம். இ-சேவை மையம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் இந்த சேவைகள் தொடரும். விருப்பமுள்ள மாணவர்கள் அங்குச் சென்று தங்கள் பதிவை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in