
மருத்துவக் கழிவுகளைஙக குப்பையுடன் கொட்டிய தனியார் மருத்துவமனை நிர்வாகத்திற்கு மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடியாக ஒரு லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சியில் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவக் கழிவுகளை முறைப்படிப் பாய்லர் மூலம் அழிக்காமல் குப்பையில் வீசுவதாகப் புகார் எழுந்தது. இந்த நிலையில், அதனைத் தீவிரமாகக் கண்காணிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள், ராஜகீழ்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளைக் குப்பைகளில் வீசுவதை இன்று கண்டுபிடித்தனர்.
இதனையடுத்துத் தாம்பரம் மாநகராட்சி சுதாதாரத்துறை துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் ஊழியர்கள் தகுந்த ஆதாரங்களைத் திரட்டிய நிலையில் அந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஒரு லட்சம் அபராதம் கட்ட வேண்டுமென நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோல் பொதுச் சுகாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் செயலில் ஈடுபடும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் முதல் முறை அபராதமும் தொடர்ச்சியாக ஈடுபட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.