மண்வெட்டியில் பாய்ந்த மின்சாரம்; தூக்கி வீசப்பட்ட ஊழியர்கள்: சென்னையில் கழிவுநீர் வடிகால் பணியின் போது சோகம்

மின்சாரம்
மின்சாரம் மாநகராட்சி கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி ஊழியர்கள் பலத்த காயம்..!

சென்னை மாநகராட்சியின் ஒப்பந்த அடிப்படையில் நடைபெற்று வரும் கழிவுநீர் வடிகால் பணியின் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு இருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை கிண்டியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் சென்னை மாநகராட்சி கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த நிறுவனத்தை சேர்ந்த இருவர் பணியில்  ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது தவறுதலாக மண்வெட்டி பூமியில் புதைக்கப்பட்டிருந்த மின்சார ஒயரில் பட்டுள்ளது.

இதனால் இருவரையும் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை அழைத்து சென்று முதலுதவி அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் கே.எம்.சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பெருமாள் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஹெலன் தாஸ் என்பது தெரியவந்துள்ளது. முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணி செய்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in