இருசக்கர வாகனத்தை வாட்டர் வாஷ் செய்த போது விபரீதம்: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

இருசக்கர வாகனத்தை வாட்டர் வாஷ் செய்த போது விபரீதம்:  மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

சென்னை கொடுங்கையூரில் இருசக்கர வாகனத்தை வாட்டர் வாஷ் செய்து கொண்டிருந்த போது, திடீரென மின்சாம் தாக்கி மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் சுமதி(42). இவரது கணவர் பாஸ்கர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார். சுமதிக்கு ஆகாஷ்( 20) என்ற மகனும், 18 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மெக்கானிக் வேலை செய்து வந்த ஆகாஷ் கடந்த 15 நாட்களாக கொடுங்கையூர் விவேகானந்தா நகரில் யுவராஜ் என்பவருக்கு சொந்தமான வாட்டர் வாஷ் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை 11 மணியளவில் ஆகாஷ் இருசக்கர வாகனத்தை வாட்டர் வாஷ் செய்து கொண்டிருந்த போது திடீரென மின்சாம் தாக்கி மயங்கி விழுந்தார்.

உடனே சக ஊழியர் ஓடிவந்து மின்மோட்டர் சுவிட்சை ஆப் செய்தவுடன் தடுமாற்றத்துடன் எழுந்த ஆகாஷ், மீண்டும் மயங்கி விழுந்தார். உடனே கடை உரிமையாளர் யுவராஜ் ஓடிவந்து ஆகாஷை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் தகவலறிந்த கொடுங்கையூர் போலீஸார் இறந்த ஆகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வாட்டர் வாஷ் கடை உரிமையாளர் யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆகாஷ் மின்சாரம் தாக்கி பலியான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in