எமிரேட்ஸ் விமான நிறுவனம் 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்: நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி

எமிரேட்ஸ் விமான நிறுவனம் 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்: நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி

சென்னையைச் சேர்ந்த பயணியை துபாய் விமான நிலையத்தில் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதற்காக 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷினு தாமஸ், சென்னையில் இருந்து துபாய் சென்றார். அதன் பின் மீண்டும் சென்னை திரும்புவதற்காக கடந்த 2015 டிசம்பர் மாதம் எமிரேட்ஸ் விமானத்தில் டிக்கெட் புக் செய்துள்ளார். சென்னையிலிருந்து துபாய் சென்ற ஷினு தாமஸ், 2016 ஜனவரி 16-ம் தேதி பிற்பகலில் சென்னை திரும்புவதற்காக துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவசர மருத்துவ காரணங்களுக்காக சிலர் செல்ல வேண்டி உள்ளதால் அவரை இரவு விமானத்தில் செல்லும்படியும், அதற்கான நிவாரணமாக, ஒரு முறை துபாய் வந்து செல்வதற்கான இலவச டிக்கெட், 100 திர்ஹாம் மதிப்பிலான வரி இல்லாத கூப்பன், ஒரு நாள் இரவு இலவசமாக தங்குவதற்கான கூப்பன் ஆகியவற்றைத் தருவதாகவும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்டு இரவு 9 மணி விமானத்தில் செல்ல ஷினு தாமஸ் ஒத்துக்கொண்டார். இந்த நிலையில், திடீரென மதிய விமானத்திலேயே ஷினு தாமஸை செல்லும்படி அரை மணி நேரத்திற்கும் குறைவான அவகாசம் வழங்கி, உடனே புறப்படும்படி நிர்பந்ததாக கூறப்படுகிறது. அதன்படி சென்னை திரும்பிய ஷினு தாமஸ், துபாய் விமான நிலையத்தில் எமிரேட்ஸ் விமான நிறுவனம் அளித்த மன உளைச்சலுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றப்பட்ட வழக்கை விசாரித்த தலைவர் வீ.ராமராஜ், உறுப்பினர்கள் என்.பாலு மற்றும் வி.லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில்," ஷினு தாமஸ்க்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக 50 ஆயிரம் ரூபாயை நான்கு வார காலத்திற்குள் எமிரேட்ஸ் விமான நிறுவனம் வழங்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in