பிளஸ் 2 மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி அவசியம்: பள்ளிக்கல்வித்துறை திடீர் உத்தரவு

பிளஸ் 2  மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி அவசியம்:  பள்ளிக்கல்வித்துறை திடீர் உத்தரவு

பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஜன.9-ம் தேதி முதல் 12-ம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்ட இயக்குநர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், " தற்போது அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படித்து பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள், கல்லூரி மாணவர் சேர்க்கை விண்ணப்பம் செய்யும்போதும், ‘நான் முதல்வன்’ திட்டத்தை அமல்படுத்துகின்ற போதும் மின்னஞ்சல் முகவரி கட்டாயம் தேவைப்படுகிறது.

எனவே, அரசுப்பள்ளிகளில் பிளஸ் 2 தற்போது படித்துக் கொண்டிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மின்னஞ்சல் முகவரி உருவாக்க வேண்டும். இந்த பணிகளை வரும் ஜன.9-ம் தேதி முதல், ஜன.12-ம் தேதிக்குள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் மின்னஞ்சலை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in