ட்விட்டரை வாங்கினார் எலான் மஸ்க்; 2 அதிகாரிகள் அதிரடி பணி நீக்கம்: ஆரம்பமே அதிரடி!

ட்விட்டரை வாங்கினார் எலான் மஸ்க்; 2 அதிகாரிகள் அதிரடி பணி நீக்கம்: ஆரம்பமே அதிரடி!

பல சர்ச்சைகள் நீடித்து வந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக வாங்கிவிட்டார். முதல் அதிரடி நடவடிக்கையாக 2 அதிகாரிகளை பணி நீக்கம் செய்துவிட்டார் மஸ்க்.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் முடிவெடுத்ததில் இருந்தே சர்ச்சைகள் வெடித்தது. ஊழியர்களுக்கு கட்டுப்பாடு, எடிட் பட்டன், எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, ட்விட்டர் ப்ளூ டிக் என அடுத்தடுத்து எலான் மஸ்க் பல சர்ச்சைகளை கிளப்பி வந்த நிலையில், ட்விட்டரில் உள்ள போலி கணக்குகளை முடக்க வேண்டும் என சமீபத்தில் கோரிக்கை விடுத்தார்.

சில மாதங்களுக்கு முன்பு எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை வாங்கினார். ஆனால், ட்விட்டர் நிர்வாகக் குழுவில் அழைப்பு விடுக்கப்பட்டபோது, அதில் இணைவதற்கு எலான் மஸ்க் மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து 44 ஆயிரம் கோடி டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை தானே வாங்கிக் கொள்வதாக அறிவித்தார். ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பங்கையும் 54.20 டாலருக்கு வாங்க விரும்புவதாக ட்விட்டரிலே அறிவித்தார். அதனை தொடர்ந்து ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், போலி கணக்குகளை கொடுக்காவிட்டால் ஒப்பந்தத்தையே ரத்து செய்துவிடுவேன் என எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளது ட்விட்டர் பங்குதாரர்கள் இடையே புயலை கிளப்பியுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக எலான் மஸ்க் கூறி ஒப்பந்தம் செய்துவிட்டு, பின்னர் அதில் இருந்து பின் வாங்கினால், அது மிகப்பெரிய அளவில் இழப்பை ஏற்படுத்தும் என்பதாலும் முக்கியமாக பங்கு சந்தையில் ட்விட்டர் நிறுவனத்திற்கு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தும் என்பதாலும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பேச்சுவார்தையின் முடிவில் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்க ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து நேற்று ட்விட்டர் நிறுவனத்தை அதிகாரபூர்வமாக வாங்கினார் எலான் மஸ்க். 44 பில்லியன் டாலர் ஒப்பந்தம் முறையாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் நிறுவனத்தின் தலைவரானார் எலான் மஸ்க். இதைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பயோவில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் என்று மாற்றிவிட்டார் மஸ்க்.

இதனிடையே, இந்தியரான பராக், ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்குவதற்கு தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இதை தடுக்க முயன்றார். இதன் காரணமாக முதல் வேலையாக ட்விட்டர் சிஇஓ-வாக இருந்த பராக் அக்ரவால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல் ஆகியோரை பணியில் இருந்து எலான் மஸ்க் நீக்கியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in