வனத்தில் இறந்து கிடந்த யானை: தந்தத்தை வெட்டிக் கடத்திய சிறுவன் கைது!

கோப்புப் படம்
கோப்புப் படம்

ஈரோடு மாவட்டத்தில் வனத்துக்குள் இறந்துகிடந்த யானயின் தந்தத்தை வெட்டிக் கடத்திய 17 வயது சிறுவன் உள்பட மூன்றுபேரை வனத்துறை போலீஸார் கைதுசெய்தனர்.

ஈரோடு மாவட்டம், அத்தியூர் வனப்பகுதியில் யானை ஒன்று இறந்துகிடந்தது. அது அழுகிய நிலையில் கிடப்பதை அந்த வழியாக ஆடுமேய்க்கச் சென்றவர்கள் பார்த்து வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். வனச்சரகர் இந்துமதி தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுபார்த்தபோது இறந்த கிடந்தது ஆண் யானை எனவும், அதன் கம்பீரமான இரு தந்தங்களும் வெட்டிக் கடத்தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த யானைக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. வனத்துறை நடத்திய தொடர் விசாரணையில் அத்தியூர் புதூர் பகுதியைச் சேர்ந்த செங்கோட்டையன்(40), சடையப்பன்(45), மற்றும் 17 வயது சிறுவன் ஒருவன் மூவருமாக சேர்ந்து வனத்திற்குள் சென்று கொண்டிருந்தபோது யானை இறந்து கிடந்ததைப் பார்த்தனர். இவர்கள் மூவரும் சேர்ந்து இரு தந்தங்களையும் வெட்டி எடுத்து விற்றது தெரியவந்தது.

இதன்பேரில், மூவரையும் கைது செய்த போலீஸார், செங்கோட்டையன், சடையப்பனை கோபி மாவட்ட சிறையிலும், 17 வயது சிறுவனை பொள்ளாச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலும் சேர்த்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in