இரவில் வாழை தோட்டம், தென்னை மரங்களை சூறையாடிய யானைக் கூட்டம்: கண்ணீரில் குமரி விவசாயிகள்!

இரவில் வாழை தோட்டம், தென்னை மரங்களை சூறையாடிய யானைக் கூட்டம்: கண்ணீரில் குமரி விவசாயிகள்!

குமரிமாவட்டம், தெள்ளாந்தி பகுதியில் வனத்திற்குள் இருந்துவந்த காட்டு யானைக் கூட்டம் ஒன்று விவசாய விளைநிலங்களுக்குள்ளும், தோட்டங்களிலும் புகுந்து கடும் பயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகாவில் நெல், வாழை சாகுபடி அதிகளவில் நடந்துவருகிறது. இதேபோல் தென்னை தோப்புகளும் அதிகளவில் உள்ளது. இங்குள்ள தெள்ளாந்தி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனப்பகுதிகளில் இருந்து யானை, குரங்குகள் வந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்ந்து வருகிறது. குரங்குகளிடம் இருந்து பயிர்களைக் காக்கும்வகையில், வாழையில் குலை தள்ளியதுமே அதன்மேல் சாக்குகளை வைத்து மூடிவிடுவார்கள். ஆனால் யானைகள் கூட்டமாக இறங்கினால் பயிர் சேதம் தவிர்க்க முடியாதது ஆகிவிடும்.

தெள்ளாந்தி பகுதியில் தாடகை மலை உள்ளது. இங்கிருந்து காட்டு யானைக் கூட்டம் ஒன்று நேற்று நள்ளிரவு அப்பகுதியில் இருந்த விவசாயிகளின் தோட்டங்களுக்குள் புகுந்தது. அங்கிருந்த வாழைகளை சேதமாக்கியது. இதில் அந்தப் பகுதியில் 800க்கும் அதிகமான வாழைகள் சேதமாகின. இதேபோல் தென்னை மரங்களையும் சேதப்படுத்தின. மலையில் இருந்து யானைகள் விவசாயப் பகுதிக்கு வராத அளவிற்கு வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in