100 யூனிட் வரை இலவசம்: தமிழகத்தில் அமலுக்கு வந்தது மின்சார கட்டண உயர்வு!

100 யூனிட் வரை இலவசம்: தமிழகத்தில் அமலுக்கு வந்தது மின்சார கட்டண உயர்வு!

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.

புதிய மின்கட்டண உயர்வில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. புதிய திட்டத்தின் படி 100 யூனிட் இலவசம் மின்சாரம் வேண்டாம் என நினைப்பவர்கள் மின்சார வாரியத்துக்கு எழுதிக் கொடுக்கலாம் என்றும் 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.27.50 என இரண்டு மாதங்களுக்கு சேர்த்து ரூ.55 கூடுதலாக மின் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

300 யூனிட் பயன்படுத்தினால் 145 ரூபாய். 400 யூனிட் பயன்படுத்தினால் இரண்டு மாதங்களுக்கு சேர்த்து கூடுதலாக 295 கட்டணம் வசூலிக்கப்படும். 500 யூனிட் 595 ரூபாய். 700 யூனிட் 580 ரூபாய். 800 யூனிட் 790 ரூபாய். 900 யூனிட் வரைக்கும் ரூ.1,130 கூடுதலாக வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி முதலியவற்றின் மின்சார மானியம் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2026-2027-ம் ஆண்டு வரை இந்த புதிய மின்சார கட்டண உயர்வு அமலில் இருக்கும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in