
வாட்டர் ஹீட்டரை ஆன் செய்த போது மின்சாரம் பாய்ந்ததில் பெண் ஒருவர் பலியான சம்பவம் வாணியம்பாடியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்தவர் ஷக்கில். இவரின் மனைவி சித்திகா பர்வீன். இவருக்கு 6 மாத பெண் குழந்தை உள்ள நிலையில் குளிப்பதற்காக வீட்டின் குளியலறையில் வாட்டர் ஹீட்டரை போட்டுள்ளார் சித்திகா பர்வீன். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் அண்மை காலமாக இப்படிப்பட்ட வாட்டர் ஹீட்டரால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றனர். வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தும்போது பொதுமக்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.