மின்வயரை மாற்ற 5,000 லஞ்சம்: மின்வாரிய பொறியாளரை சிக்கவைத்த விவசாயி

கைது
கைதுமின்வயரை மாற்ற 5000 லஞ்சம்: மின்வாரிய பொறியாளரை சிக்கவைத்த விவசாயி

தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் பகுதியில் நிலத்தின் வழியாகச் செல்லும் மின்கம்பம், மின்வயரை மாற்ற 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் பகுதியில் மின்வாரிய அலுவலகம் ஒன்று உள்ளது. இங்கு பொன்ராஜ் என்பவர் இளநிலைப் பொறியாளராக உள்ளார். இங்கு பாரதிசங்கர் என்னும் விவசாயி தனது நிலத்தின் வழியாக மின்சார வயர், மின்கம்பம் செல்வதாகவும் அதனை மாற்றித்தருமாறும் நாலாட்டின்புதூர் மின்வாரியத்தில் மனு கொடுத்தார். அப்போது அந்த மனுவை இணைய வழியில் ஏற்றுவதற்கு மின்வாரிய இளநிலைப் பொறியாளர் பொன்ராஜ் 5000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து விவசாயி பாரதிசங்கர், தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். அவர்களது வழிகாட்டுதல்படி இன்றுகாலையில் ரசாயம் தடவிய 5000 ரூபாயோடு பாரதிசங்கர் மின்வாரிய அலுவலகம் சென்றார். அதை பொறியாளர் பொன்ராஜ் பெற்றுக்கொண்டபோது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீஸார் பொறியாளர் பொன்ராஜைக் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகின்றது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in