மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்து ஊழியர் படுகொலை: நள்ளிரவில் நடந்த பயங்கரம்

கொலை
கொலை

தூத்துக்குடியில் மின்வாரிய அலுவலகத்தில் புகுந்து ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி கே.டி.சி நகரைச் சேர்ந்தவர் ஆனந்த பாண்டி(51) இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர் நாசரேத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் லைன் மேனாக வேலை செய்துவந்தார். இரவு நேற்று மின்வாரிய அலுவலகத்தில் வழக்கம் போல் பணியில் இருந்தார். இந்நிலையில் இன்று காலையில் பணிக்கு வந்த மின்வாரிய மாற்றுப்பணியாளர் பணிக்கு வந்த போது அலுவலகத்திலேயே ஆனந்த பாண்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சாத்தான்குளம் டி.எஸ்.பி அருள் தலைமையிலான போலீஸாரின் தீவிர விசாரணையில் நேற்று இரவு பணியில் இருந்த போதே மர்மநபர்களால் ஆனந்த பாண்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ஆனந்தபாண்டியின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் ஆனந்தபாண்டிக்கு வேறு யாருடனாவது முன்பகை இருந்ததா என்னும் கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in