வீட்டில் சார்ஜ் ஏற்றியபோது வெடித்து சிதறிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: 5 பேர் உயிர் தப்பினர்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்வீட்டில் சார்ஜ் ஏற்றியபோது வெடித்து சிதறிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: 5 பேர் உயிர் தப்பினர்

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் சார்ஜ் ஏற்றியபோது மின்சார ஸ்கூட்டர் வெடித்து சிதறியது. இந்த அதிர்ச்சி சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர். ஆனால், பல வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமானது.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம், மத்தூர் தாலுகாவில் உள்ள வலகெரேஹள்ளி கிராமத்தில், இன்று காலை 8:30 மணியளவில் சார்ஜ் செய்வதற்காக மின்சார ஸ்கூட்டரை அதன் உரிமையாளர் வீட்டிற்குள் நிறுத்தி வைத்திருந்தார். சார்ஜ் போட்ட சில நிமிடங்களில், எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து, ஸ்கூட்டி தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக ஐந்து பேரும் வீட்டினுள் இருந்த போது இந்த சம்பவம் நடந்ததால் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. சார்ஜ் செய்யத் தொடங்கிய உடனேயே சில நிமிடங்களில் ஸ்கூட்டர் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில், டி.வி, குளிர்சாதனப் பெட்டி, சாப்பாட்டு மேஜை, மொபைல் போன்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.

இது குறித்து பேசிய வாகன உரிமையாளர் முத்துராஜ், "விபத்தின் போது, எனது குடும்பத்தினர் அனைவரும் உள்ளேயிருந்தனர். அதனால் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. ஸ்கூட்டர் தீப்பற்றியவுடன் எங்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதில் இரண்டு மூன்று மொபைல் போன்கள் சேதமடைந்துள்ளன. குளிர்சாதன பெட்டி, டிவி, டைனிங் டேபிள், கண்ணாடிகள் போன்ற அனைத்து வீட்டுப் பொருட்களும் இதன் தாக்கத்தால் உடைந்தன” என்று கூறினார்.

மாண்டியாவில் உள்ள ஒரு ஷோரூமில் இருந்து ஆறு மாதங்களுக்கு முன்பு முத்துராஜ் என்பவர் 85,000 ரூபாய்க்கு ரூட் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஸ்கூட்டரை வாங்கியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in