டெல்லி ஏர்போர்ட்டில் குளிரை சமாளிக்க மின்சாரக் கூரை!

ஆசுவாசப்படுத்தி திரும்பும் பயணிகள்
மின்சாரக் கூரையில் குளிர் காயும் பயணிகள்
மின்சாரக் கூரையில் குளிர் காயும் பயணிகள்

டெல்லியின் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் குளிரை சமாளிப்பதற்காக மின்சாரக் கூரைகள் வைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து விமானங்களில் வரும் பயணிகள் கடும் குளிரை இதன் மூலம் சமாளித்து வருகின்றனர்.

டெல்லியில் ஏற்பட்டுள்ள கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். விமானங்கள் காலதாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து டெல்லி விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் குளிரால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் குளிரை சமாளிக்க மின்சாரக் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அந்த கூரையில் நின்றபடி கடும் குளிரை சமாளித்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு திரும்புகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in