யார் இந்த `டாம் லேதம்'?; இந்திய அணியை இப்படி திக்குமுக்காட வைத்துவிட்டார்!

யார் இந்த `டாம் லேதம்'?; இந்திய அணியை இப்படி திக்குமுக்காட வைத்துவிட்டார்!

இந்தியாவுக்கு எதிராக முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டாம் லேதம் காட்டிய அதிரடியால் அந்த அணி எளிதாக வெற்றி பெற்றது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நடந்து முடிந்த டி20 கிரிக்கெட் போட்டித் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் 72 ரன்னும், கில் 50 ரன்னும் குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது. பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 80 ரன்களை விளாசினார். இதில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடங்கும். பின்னர் வந்த ரிஷப் பண்ட் 15 ரன்னிலும், சூரியகுமார் யாதவ் 4 ரன்னிலும், சஞ்சிவ் சாம்சங் 36 ரன்னிலும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

வாஷிங்டன் சுந்தர் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி, பெர்யூஷன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதை எடுத்து 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான ஆலின் 22 ரன்னிலும், கான்வே 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வில்லியம்சன் களமிறங்கினார். இவர் இந்திய பந்துவீச்சை நாலா பக்கமும் சிதறடித்து ரன்களை குவித்தார். அதே நேரத்தில் மறுமுனையில் ஆடிய மின்செல் 11 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, டாம் லேதம் களம் இறங்கினார். இவர் அதிரடியாக விளையாடி 104 பந்துகளில் 145 ரன்கள் குவித்தார். இதில் 19 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். ஒற்றை ஆளாக நின்ற டாம் லேதம் நியூசிலாந்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார். அந்த அணி 47.1 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 309 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

யார் இந்த `டாம் லேதம்'

68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 30 வயதான டாம் லேதம், 4,623 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 264 ரன்கள் விளாசியுள்ளார். 12 சதமும், 23 அரை சதமும் அடித்துள்ளார்.

115 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள டாம் லேதம், 3,382 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக இன்று அதிரடியாக விளையாடிய 145 ரன்கள் குவித்ததுதான். 7 சதமும், 18 அரை சதமும் விளாசியுள்ளார்.

இரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி வரும் 27-ம் தேதி ஹாமிட்டனில் நடைபெறுகிறது. வரும் 30-ம் தேதி கிறிஸ்சர்ச்சில் 3-வது போட்டி நடக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in