மாநிலத்தின் தேர்தல் தேதியில் திடீர் மாற்றம்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு

ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதியில் மாற்றம் செய்து, இந்திய தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று(அக்.11) தேர்தல் ஆணையம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில், ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தினமாக அறிவிக்கப்பட்டிருந்த நவ.23 தினத்தை மாற்றி அமைக்குமாறு சமூகத்தின் பல தரப்பினரிடம் இருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

’அன்றைய தினம் திருமணம் உள்ளிட்ட விஷேசங்களுக்கானது என்பதால், வாக்குப்பதிவுக்கு வருகை தரும் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருப்பதாக, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. எனவே அவற்றை பரிசீலித்து, வாக்குப்பதிவு தினத்தை நவ.25 அன்று மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

இதன் மூலம் ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நாள் நவ.23 வியாழனுக்கு பதில் நவ.25 சனி தினத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை தினமான டிசம்பர் 3, மாற்றமின்றி அப்படியே தொடரும்.

முன்னதாக இந்திய தேர்தல் ஆணையம் அக்.9 அன்று ராஜஸ்தான் தேர்தலுக்கான தேதியை, 4 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களுடன் சேர்த்து அறிவித்தது. இதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 90 சட்டமன்றத் தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக நவ.7 அன்று வாக்குப்பதிவு நடைபெறும். மீதமுள்ள தொகுதிகளுக்கு நவம்பர் 17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

சத்தீஸ்கர் தவிர்த்த இதர மாவட்டங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்படி, 40 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மிசோரமில் நவ.7 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தின் 230 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, நவ.17 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!

வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!

ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!

உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in