
வயதான இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அடுத்த கால் நூற்றாண்டு காலத்தில் இந்தியாவின் மனிதவளம் இதுவரை இல்லாத மாற்றத்தை எதிர்கொள்ள இருக்கிறது.
நாளது தேதியில் உலகின் மிகவும் இளமையான தேசம் என்றால் அது இந்தியாதான். இளம்வயதினரின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதில் இந்திய மனிதவளத்தை உலகமே உற்று கவனிக்கிறது; பயன்படுத்திக்கொள்ள துடிக்கிறது. உலகின் தலைசிறந்த கார்ப்பரேட் நிறுவனங்களில் எல்லாம் இந்தியர்களே கோலோச்சுகின்றனர். இந்திய பட்டதாரிகளுக்கு கோடிகளை கொட்டி பெரும் நிறுவனங்கள் கவர்ந்து செல்கின்றன. ஆனால் இவை எத்தனை காலத்துக்கு நீடிக்கும்?
இன்றைய மிகுதியான எண்ணிக்கையில் உள்ள இளம் தலைமுறையினரே பிற்பாடு, முதியவர்களின் கூடும் எண்ணிக்கைக்கு காரணமாகப் போகிறார்கள். இந்த வகையில் அடுத்த கால்நூற்றாண்டு காலத்தில் இந்தியாவில் முதியவர்களின் எண்ணிக்கை வெகுவாய் மிகுந்திருக்கும். அதாவது 2050க்குள் இந்தியர்களில் ஐந்தில் ஒருவர் 60 வயதை கடந்தவராக இருப்பார் என்று ஐநா புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.
2010ம் ஆண்டு முதலே முதியவர்களின் எண்ணிக்கையில் இந்தியா மாற்றத்தை உணர ஆரம்பித்து விட்டது. 1950ல் தொடங்கிய கணக்கு ஒன்றில், அதற்கடுத்த 67 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 65 வயதுக்கும் மேற்பட்டோரின் எண்ணிக்கை 3.1 % என்பதிலிருந்து உயர்ந்து 6% என்பதாக உயர்ந்திருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளில் இந்த இரட்டிப்பு, அடுத்த இரட்டிப்பாக எகிறும் என்றொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இளைஞர்கள் என்றால் செயலில் வேகம் காட்டுவார்கள்; முதியவர்கள் என்றால் நிதானத்துடன் வழிகாட்டுவார்கள்!இந்தியாவில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, முதிர்ச்சியான தேசத்தின் வளர்ச்சிக்கு உதவக்கூடும். ஆனால் தனிப்பட்ட வகையில் குடும்பங்களுக்கும் மற்றும் பொதுவில் அரசுக்கும், நாட்டிலுள்ள முதியவர்களை பராமரிப்பது பெரும் மெனக்கிடலை கோரக்கூடும். அண்மை ஆண்டுகளாக ஜப்பான் தேசம் திணறி வருவதே கண்கூடு உதாரணம்.
இதையும் வாசிக்கலாமே...
HBD JYOTHIKA | மறக்க முடியாத நாளும்... மறுத்து... பின் கிடைத்த வாய்ப்பும்!
இந்தியாவைத் தோற்கடிச்சா என் கூட டின்னர் சாப்பிடலாம்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல நடிகை!
அதிர்ச்சி... இளம் மல்யுத்த வீராங்கனை தற்கொலை!
வரி ஏய்ப்பு புகார்... தமிழகத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு!
சோகம்... எல்லாமே 2000 ரூபாய் நோட்டுக்கள்... 1.50 லட்சத்தை மாற்ற முடியாமல் தவிக்கும் பெண்மணி!