ரயில் கழிப்பறையில் இரும்பு சங்கிலியால் தொங்கிய படி கிடந்த சடலம்: பதறிய பயணிகள்

ரயில் கழிப்பறையில் இரும்பு சங்கிலியால் தொங்கிய படி கிடந்த சடலம்: பதறிய பயணிகள்

கேரளாவில் ஓடும் ரயிலில் கழிவறையில் சேலத்தைச் சேர்ந்த முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் சோரனூரில் இருந்து கோவை நோக்கி இன்று ரயில் சென்று கொண்டிருந்தது. பாலக்காடு அருகே பரளி ரயில் நிலையம் அருகே ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது பயணி ஒருவர் கழிவறை சென்றார். அப்போது கழிவறையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இரும்பு சங்கிலியால் தூக்குப் போட்டு தற்கொலை செய்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ரயில் போலீஸார், கழிவறையில் இருந்த முதியவர் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது இறந்தவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பது தெரிய வந்து. எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் ரயில் ஒரு மணி நேரம் தாமதத்திற்குப் பின் புறப்பட்டுச் சென்றது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in