அறை எடுத்து யானை தந்தங்கள் விற்பனை... சுற்றி வளைத்த வனத்துறையினர்: சிக்கிய 8 பேரிடம் சொகுசு கார் பறிமுதல்!

கைதான எட்டு பேர்
கைதான எட்டு பேர்

கொடைக்கானலில் யானைத் தந்தங்களை விற்க முயன்ற எட்டு பேரை வனத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து இரண்டு யானை தந்தங்கள் மற்றும் துப்பாக்கி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெருமாள் மலையை அடுத்த பாலமலை பகுதியில் யானை தந்தங்கள் விற்பதாக கொடைக்கானல் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வனத்துறையினர் இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பாலமலை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் 9 பேர் கொண்ட கும்பல் தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வத்தலகுண்டு பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த பிரபாகர் (40), கொடைக்கானல் பெருமாள் மலையைச் சேர்ந்த ஜோசப் சேவியர் (40), மதுரை தனக்கன்குளத்தைச் சேர்ந்த சந்திரன் (40) மற்றும் பிரகாஷ் (24), கேரள மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ரஷீத் (47) மற்றும் சிபின் தாமஸ் (26), பழனி பாலாறு டேம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (56), காரைக்குடியைச் சேர்ந்த ராஜ்குமார் (29) ஆகிய 8 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

மேலும், இவர்களிடம் இருந்து இரண்டு யானை தந்தங்கள், ஒரு நாட்டு துப்பாக்கி, இவர்கள் பயன்படுத்திய சொகுசு கார் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்ற போது, கொடைக்கானல் பெருமாள் மலையைச் சேர்ந்த சார்லஸ் தப்பி ஓடி உள்ளார். தப்பி ஓடிய சார்லஸை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in