பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா-வுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல்

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா-வுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல்

தடை செய்யப்பட்ட ’பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ அமைப்புக்கு எதிராக, அமலாக்கத்துறை இன்று(நவ.19) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலான சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு உள்துறை அமைச்சகம் 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. தேச பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகள், இளைஞர்களுக்கான பயிற்சிகள், நிதி சேகரிப்பு ஆகியவற்றை மேற்கொண்டதாக குற்றம்சாட்டி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தடை நடவடிக்கை அமலுக்கு வந்தது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மட்டுமன்றி அதன் துணை அமைப்புகளுக்கும் இந்த தடை பொருந்தும் என்று அறிவித்ததோடு, ஹவாலா முறையில் வளைகுடா நாடுகளில் இருந்து இந்த அமைப்பு பெருமளவு நிதி சேகரித்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் நீள்கின்றன.

தேச பாதுகாப்புக்கு எதிரான குற்ற வழக்குகளை என்ஐஏ அமைப்பும், சட்டவிரோத பண பரிமாற்றங்களை அமலாக்கத்துறையும் விசாரிக்கத் தொடங்கியுள்ளன. இந்த வகையில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்று(நவ.19) தாக்கல் செய்தது. வழக்கு விசாரணை நவ.21 திங்களன்று தொடங்கும் எனவும் தெரிய வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in