ஹனிடிராப், செக்ஸ்டார்சன்: ஒடிசாவை கலக்கிய பெண்ணுக்கு எதிராக பாய்ந்தது அமலாக்கத்துறை

ஹனிடிராப், செக்ஸ்டார்சன்: ஒடிசாவை கலக்கிய பெண்ணுக்கு எதிராக பாய்ந்தது அமலாக்கத்துறை

பாலியல் மிரட்டலை ஆயுதமாக்கி ஒடிசா மாநிலத்தில் பிரபலங்களை மிரட்டி பணம்பறித்த பெண்ணின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை இன்று நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை சேர்ந்தவர் அர்ச்சனா நாக். இவரது கணவர் ஜக்பந்து சந்த். பழைய வாகன விற்பனையில் ஈடுபட்டு வந்த ஜக்பந்து தொழிலில் அதிகம் நஷ்டமடைந்தார். அப்போது அவருக்கு உதவுவதாக உத்திரவாதமளித்த பெரும்புள்ளி ஒருவர், கைம்மாறாக அர்ச்சனா மீது கண் வைத்தார். நிதி நெருக்கடியில் இருந்த கணவனும் மனைவியும் கலந்து பேசினார்கள். அதன்படி பெரும்புள்ளியுடன் அர்ச்சனா தனித்திருக்கும் காட்சிகளை, ஜக்பந்து கேமராவில் பதிவு செய்தார்.

பின்னர் வெளியாட்கள் இருவரை நியமித்து, அந்த ஏடாகூட படங்களை காட்டியே பெரும்புள்ளியிடமிருந்து தவணை முறையில் பெருந்தொகை கறக்க ஆரம்பித்தனர். மேற்படி பெரும்புள்ளியும், சமுதாயத்தில் தன் மீது கரும்புள்ளி விழக்கூடாது என்ற எச்சரிக்கையில், லட்சங்களை அழுதார். இப்படி பாலியல் மிரட்டலை முன்வைத்து பணம் பறிக்கும் ’செக்ஸ்டார்சன்’ உத்தியில் ருசி கண்ட ஜக்பந்து - அர்ச்சனா ஜோடி, பின்னர் இதையே தொழிலாக மாற்றினார்கள்.

அழகுப்பெண்கள், அடியாட்கள் கொண்ட படையை வைத்து, பசையான நபர்களிடம் வேட்டையாட ஆரம்பித்தனர். சபலிஸ்டுகளிடம் செக்ஸ்டார்சன் மூலம் பணம் பறித்தவர்கள், மற்றவர்களை ஹனிடிராப் வலையில் வீழ்த்தினார்கள். இப்படி 2018 முதல் 2022 வரை கோடிகளை குவித்தார்கள். அரசியல்வாதிகள் சிலரும் இவர்களிடம் பாதிக்கப்பட்டதில், ’அர்ச்சனா அண்ட் கோ’வை மடக்க திரைமறைவில் திட்டம் தீட்டப்பட்டது.

அதன்படி, அர்ச்சனா நாக் மீதான புகார்கள் அரசியல் அழுத்தத்தோடு கிளம்பியதில், கணவர் மற்றும் உதவியாட்களுடன் அவர் கைதானார். தற்போது புவனேஸ்வர் சிறையிலிருக்கும் அர்ச்சனா நாக் சேர்த்த சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்க அமலாக்கத்துறையும் களத்தில் இறங்கியது. அப்படியான விசாரணையின் அடிப்படையில் அர்ச்சனாவின் ரூ.3.64 கோடி மதிப்பிலான சொகுசு மாளிகை உள்ளிட்ட சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை இன்று நடவடிக்கை எடுத்திருக்கிறது.

ஏராளமான பிரபலங்களின் பலான பதிவுகள் அர்ச்சனா வசம் இருப்பதால், திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக ஏமாந்த பேர்வழிகள் தவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in