ஹேமந்த் சோரன் வழக்கில் மேலும் 4 பேர் கைது; அமலாக்கத் துறை அதிரடி!

கைது
கைது

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தொடர்புடைய நில அபகரிப்பு தொடர்பான பண மோசடி வழக்கில் மேலும் 4 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.

நில அபகரிப்பு தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரும், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத் துறை கைது செய்தது. தற்போது அவர் ஹோட்வாரில் உள்ள பிர்சா முண்டா சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியும் முன்னாள் வருவாய்த் துறை துணை ஆய்வாளருமான பானு பிரதாப் பிரசாத், முகமது சதாம் ஹுசைன், அஃப்ஷர் அலி ஆகியோரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்

இந்நிலையில் இந்த வழக்கில் மேலும் 4 பேரை, சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்கத் துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தகவல் படி, அந்து டிர்கி, பிரியா ரஞ்சன் சஹாய், பிபின் சிங், இர்ஷாத் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக ராஞ்சியில் அந்து டிர்கி மற்றும் மேலும் சிலரின் வீடுகள், தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

அமலாக்கத் துறை
அமலாக்கத் துறை

இந்த வழக்கில் ஹேமந்த் சோரன், அவரது ஆதரவாளர்களான ராஜ் குமார் பாஹன், ஹிலாரியாஸ் கச்சாப், பானு பிரதாப் பிரசாத், முன்னாள் முதல்வர் பினோத் சிங்கின் கூட்டாளிகள் உள்ளிட்டோர் மீது கடந்த மாதம் 30ம் தேதி அன்று ராஞ்சியில் உள்ள பிஎம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

மேலும், இந்த வழக்கு தொடர்புடைய நிலத்தை அமலாக்கத் துறை முடக்கியுள்ளதோடு, அதனை பறிமுதல் செய்ய நீதிமன்றத்தின் அனுமதியை அமலாக்கத்துறை எதிர்நோக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

இந்த 5 தொகுதிகளில் வெற்றி இழுபறி!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைக்கு 2 நாட்கள் விடுமுறை... தேர்தலை முன்னிட்டு அறிவிப்பு!

புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு... தேர்தல் ஆணையம் அதிரடி!

தாயைப் பிரிந்த ஏக்கம்... 25 நாட்களாக தவித்த குட்டியானை உயிரை இழந்தது!

நேரிலும், செல்போனிலும் வாலிபர் காதல் டார்ச்சர்.... மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in