உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கியது தேர்தல் ஆணையம்... நெறிமுறைகளை மாற்ற ஒப்புதல்

உச்சநீதிமன்றம் - தேர்தல் ஆணையம்
உச்சநீதிமன்றம் - தேர்தல் ஆணையம்

உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்களை பதிவேற்றும் யூனிட்டை கையாளுதல் மற்றும் பாதுகாக்கும் நடைமுறைகளை மாற்றியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) சீல் வைக்கப்பட்டு ஒரு பெட்டியில் வைத்து குறைந்தது 45 நாட்களுக்கு ஸ்ட்ராங் ரூமில் (பாதுகாப்பு அறை) பாதுகாக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவிஎம், விவிபாட், கன்ட்ரோல் யூனிட்
இவிஎம், விவிபாட், கன்ட்ரோல் யூனிட்

அதன்படி, இவிஎம் இயந்திரத்தில் சின்னத்தை பதிவேற்றும் யூனிட்டுகள் மற்றும் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரம் (விவிபாட்) இயந்திரம் ஆகியவற்றை கையாளுதல் மற்றும் இருப்பு வைத்தலுக்கான நெறிமுறைகளை மாற்றியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சின்னங்களை பதிவேற்றும் யூனிட்டுகளை கையாளுதல் மற்றும் சேமித்து வைப்பதற்கான புதிய நெறிமுறைகளைச் செயல்படுத்த தேவையான உள்கட்டமைப்பு, ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி 2024 மே 1 அல்லது அதற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட விவிபாட் இயந்திரங்களில், சின்னங்களை பதிவேற்றும் செயல்முறை முடிந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் திருத்தப்பட்ட நெறிமுறைகள் பொருந்தும்.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in