மின் இணைப்பு வழங்க 15 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கிய உதவி பொறியாளர்

மின் இணைப்பு வழங்க 15 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கிய உதவி பொறியாளர்

புதிய மின் இணைப்புக்கு 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, உதவி பொறியாளரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை செங்குன்றம் சோத்துப்பாக்கம் ரோடு பாலவாயிலில் உள்ள மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் அதே பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக உதவி பொறியாளர் கணேசனை தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு அவர் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

லஞ்சம் கொடுப்பதை விரும்பாத அந்த நபர் இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்துள்ளார். அதன்படி திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கலைச்செல்வம் ஆய்வாளர் தமிழரசி மற்றும் 6 பேர்கொண்ட போலீஸார், தகவல் அளித்த நபரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டை கொடுத்து அனுப்பியுள்ளனர்.

அவரும் அந்த பணத்தை மின்சார உதவி பொறியாளர் கணேசன் வழங்கியுள்ளார். அதை வாங்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும், களவுமாக கணேசனை மடக்கிப் பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in