அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது தாக்குதல்

ஜேஎன்யூ பல்கலையில் பதற்றம்
அசைவ உணவு சாப்பிட்ட
மாணவர்கள் மீது தாக்குதல்

டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யூ) அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது பாஜக மாணவர் அமைப்பினரான ஏவிபிவியினர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. இந்த தாக்குதலில் 2 மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர்.

டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள காவேரி விடுதியில் அசைவ உணவிற்குத் தடை விதிக்க பாஜக மாணவர் அமைப்பான ஏவிபியினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். நேற்று இரவு விடுதியில் அசைவ உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் மாணவிகள் மதுரிமா, அக்தாரிஸ்தா அன்சாரி ஆகியோர் படுகாயமடைந்தனர். மேலும் ஏஐஎஸ்ஏ அகில இந்திய தலைவர் சாய்பாலாஜியும் காயமடைந்தார்.

சம்பவ இடத்தில் டெல்லி வசந்த விஹார் காவல்நிலைய போலீஸார் இருந்தும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென இடதுசாரி மாணவர் அமைப்பினர் குற்றம் சாட்டினர். ' ஜேஎன்யூ மற்றும் அதன் விடுதிகள் அனைவருக்கும் பொதுவான இடமாகும். அது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் சொந்தமானது இல்லை' என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த சம்பவத்தால் ஜேஎன்யூவில் மாணவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in