டெல்லியில் 5 நாட்களில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி


டெல்லியில் 5 நாட்களில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் உள்ள பைசபாத்தில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் இன்று இரவு 7.55 மணியளவில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் டெல்லி - என்சிஆர் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

பூமிக்கு அடியில் 200 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதில் காயங்கள் மற்றும் சேதங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.

தேசிய தலைநகரில் ஒரு வாரத்தில் நிலநடுக்கம் உணரப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஜனவரி 1-ம் தேதி, அதிகாலை 1:19 மணியளவில் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் காயங்களோ அல்லது சேதங்களோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in