
இந்தோனேசியாவில் இரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுதான் பொதுமக்கள் வீட்டை விட்டு அலறி அடித்துக் கொண்டு வீதிக்கு வந்தனர்.
இந்தோனேசியாவின் டனிம்பர் தீவுப் பகுதியில் நேற்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி இருக்கிறது. இந்த நிலநடுக்கம் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை உணரப்பட்டதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தது. இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீதிக்கு ஓடி வந்தனர். கடுமையான நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கையை விடுக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
இந்தோனேஷியாவில் அடிக்கடி சுனாமி ஏற்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேஷியாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.