டெல்லியை உலுக்கியது நிலநடுக்கம்: அடுத்தடுத்த பூகம்பங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி!

நிலநடுக்கம்
நிலநடுக்கம்டெல்லியை உலுக்கியது நிலநடுக்கம்: அடுத்தடுத்த பூகம்பங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி!

டெல்லியில் இன்று மாலை 2.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் 13 உயிர்களை பறித்த நிலையில், இன்று நில அதிர்வுகள் ஏற்பட்டதால் டெல்லி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

மேற்கு டெல்லியில் இன்று மாலை 2.7 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நிலநடுக்க ஆய்வு மையத்தின் தகவல்களின்படி, மேற்கு டெல்லியில் இன்று மாலை 4.42 மணியளவில் 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் பொதுமக்கள் பெரிதும் பீதியடைந்தனர்.

செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் பாகிஸ்தானில் ஒன்பது பேரும் ஆப்கானிஸ்தானில் 4 பேரும் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கம்

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், ஹரியானா, பஞ்சாப், இமாசல பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் உணரப்பட்டது. டெல்லி மற்றும் நொய்டாவிலும் நேற்று இரவு இரண்டு நிமிடங்களுக்கு நீடித்த இந்த நிலஅதிர்வை உணர்ந்த பின்னர், பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் நின்றனர்.

ரிக்டர் அளவுகோலில் 4க்கு மேல் பதிவான 6 நிலநடுக்கங்கள், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவை உலுக்கியுள்ளது.

கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளாக, இந்தியாவின் வட மாநிலங்களை நிலநடுக்கங்கள் அடிக்கடி தாக்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in