நேபாளத்தில் அடுத்தடுத்து அதிர வைத்த நிலநடுக்கம்: 6 பேர் பலி

நேபாளத்தில் அடுத்தடுத்து அதிர வைத்த நிலநடுக்கம்: 6 பேர் பலி

நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேபாள நாட்டின் மேற்கே டோடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கங்களில் இதுவரைக்கும் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து அந்நாட்டின் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில்," நேபாள நாட்டின் மேற்கே நேற்று இரவு 9.07 மணி அளவில் 6.7 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இரவு 9:56 மணியளவில் 4.1 ரிக்டர் அளவிலான இன்னொரு நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன் பின்னர் இன்று அதிகாலை 2. 12 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.6 ரிக்டர் ஆக பதிவாகி இருக்கிறது. இந்த நிலநடுக்கங்களில் வீடு இடிந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கங்களில் மொத்தம் ஆறு பேர் உயிரிழந்து உள்ளனர்" என்று கூறியுள்ளது. இந்தியாவின் புது டெல்லி மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளிலும் இந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரமடைந்துள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியும் மீட்புப்படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in