இந்தியா, ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தானை துரத்தும் பூகம்பம் - மக்கள் பீதி

நிலநடுக்கம்
நிலநடுக்கம் மணிப்பூர், மேகாலயாவில் நிலநடுக்கம்: ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தானையும் துரத்தும் பூகம்பம் - மக்கள் பீதி

இன்று அதிகாலை மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. மேகாலயாவின் துரா மாவட்டத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதேபோல ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தானிலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்துக்குப் பின்னர் தெற்காசிய நாடுகளில் தொடர்ந்து நிலநடுக்கம் பதிவாகி வருகிறது. இந்தியாவிலும் வட மாநிலங்களில் நிலநடுக்கம் தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மணிப்பூரில் இன்று அதிகாலை 2.46 மணியளவில் 25 கி.மீ ஆழத்தில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல மேகாலயாவின் துரா மாவட்டத்திலும் 29 கி.மீ ஆழத்தில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று அதிகாலை 4.05 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 36.38 அட்சரேகை மற்றும் 70.94 தீர்க்கரேகையில் தாக்கியது. அதேபோல தஜிகிஸ்தானில் இன்று காலை 05:31 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 38.20 அட்சரேகை மற்றும் 73.85 தீர்க்கரேகையில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் தாக்கியது.

முன்னதாக, பிப்ரவரி 19 அன்று இந்தூர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளில் 3.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன் குஜராத்தின் ராஜ்கோட்டில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in