மத்திய பிரதேசத்தில் நிலநடுக்கம் - மணிப்பூரிலும் நில அதிர்வுகள்: இந்தியாவை விடாமல் துரத்தும் பூகம்பங்கள்

நிலநடுக்கம்
நிலநடுக்கம்மத்திய பிரதேசத்தில் நிலநடுக்கம் - மணிப்பூரிலும் நில அதிர்வுகள்: இந்தியாவை விடாமல் துரத்தும் பூகம்பங்கள்

மத்திய பிரதேசத்தில் இன்று 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம்தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 10:31 மணிக்கு குவாலியரைத் தாக்கியது.

ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவான நிலநடுக்கம், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை தாக்கியதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மணிப்பூரின் மொய்ராங்கில் 3.9 ரிக்டர் அளவுகோலில் இன்று காலை 08:52 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில், டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4க்கு மேல் பதிவான 6 நிலநடுக்கங்கள், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியாவை உலுக்கியுள்ளது. கடந்த பிப்ரவரி 6ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 10 க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் வட இந்தியாவைத் தாக்கியுள்ளதால், அப்பகுதிகளில் உள்ள மக்களிடம் அச்சம் நிலவுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in