நேபாளத்தை நடுங்க வைத்த அதிகாலை நிலநடுக்கம்

நேபாளத்தை நடுங்க வைத்த அதிகாலை நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது.

நேபாளம் நுவாகோட் மாவட்டத்தில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் அளவில் 5.3 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

நேபாளத்தில் கடந்த 6 நாட்களுக்கு முன்பும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in