1 முதல் 9-ம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வா? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ் 1 முதல் 9-ம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வா? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

வைரஸ் காய்ச்சல் காரணமாக 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வுகள் நடத்தப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வுகளை வைரஸ் காய்ச்சல் காரணமாக மாற்றி வைப்பதற்கான முடிவுகள் தற்போது வரை எடுக்கப்படவில்லை. வைரஸ் தொற்று அதிகரித்தால் சுகாதாரத் துறையுடன் கலந்து ஆலோசித்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி முடிவு எடுக்கப்படும்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மொழிப்பாடத் தேர்வை 50 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுத வராதது ஏன் என்பது குறித்து உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவிலான மாணவர்கள் ஆப்செண்ட் ஆகியுள்ளனர். அடுத்து வரும் தேர்வுகளில் ஆப்செண்ட் ஆகும் மாணவர்கள் குறித்து உடனடியாக ஆய்வு செய்து காரணத்தை கண்டறிய வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், அடுத்து வரும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளோம். இப்போது வரை பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு வைப்பது குறித்த முடிவு எடுக்கப்படவில்லை" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in