துருக்கி நிலநடுக்கத்தை 3 நாட்களுக்கு முன்பே கணித்த டச்சு ஆராய்ச்சியாளர்!

டச்சு ஆராய்ச்சியாளர் ஃப்ராங்க் கூகர்பீட்ஸ்
டச்சு ஆராய்ச்சியாளர் ஃப்ராங்க் கூகர்பீட்ஸ்

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை மூன்று நாட்களுக்கு முன்பே கணித்திருக்கிறார் டச்சு ஆராய்ச்சியாளர்.

துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழந்துள்ளனர். துருக்கியில் இடிந்து விழுந்த 5,606 கட்டிடங்களில் குடியிருப்பாளர்கள் நிறைந்த பல மாடி அடுக்குமாடி கட்டிடங்களும் அடங்கும். மீட்பு பணியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல கட்டிடங்கள் இடிந்து கிடப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

டச்சு ஆராய்ச்சியாளர் ஃப்ராங்க் கூகர்பீட்ஸ் ட்வீட்
டச்சு ஆராய்ச்சியாளர் ஃப்ராங்க் கூகர்பீட்ஸ் ட்வீட்

இதனிடையே, இந்த நிலநடுக்கத்தை மூன்று நாட்களுக்கு முன்பே கணித்திருக்கிறார் டச்சு ஆராய்ச்சியாளர் ஃப்ராங்க் கூகர்பீட்ஸ் (frank hoogerbeets). துருக்கியில் நிலநடுக்கம் ஏற்படும் என்று மூன்று நாள்களுக்கு முன்பே கணித்து அதை பிப்ரவரி 3-ம் தேதி ட்வீட்டும் செய்துள்ளார். பிப்ரவரி-3 அன்று அவர் பகிர்ந்த ட்வீட்டில், "மத்திய மற்றும் தெற்கு துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் ஆகிய பகுதிகளைக் குறிப்பிட்டு 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது" என்று வரைபடத்துடன் கூறியிருந்தார்.

அவர் கணித்து கூறியதுபோலவே, துருக்கி - சிரியா எல்லையில் 7.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நெதர்லாந்தை சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் ஃப்ரான்க் ஹூகர்பீட்ஸ், SSGEOS என்ற புவியியல் ஆய்வு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார். துருக்கி நிலநடுக்கத்தால் தனது மனது நிம்மதியை இழந்துள்ளது எனக் கூறியுள்ள இவர், "நான் முன்பே கூறியது போல், 115 மற்றும் 526-ம் ஆண்டுகளைப் போலவே இந்த பிராந்தியத்தில் கூடிய சீக்கிரத்தில் அல்லது தாமதமாகவோ பூகம்பம் நிகழும்.

இந்த நிலநடுக்கங்கள் எப்போதுமே முக்கியமான கிரக வடிவவியலால் ஏற்படுகின்றன. மத்திய துருக்கி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் கூடுதலான வலுவான நில அதிர்வு நடவடிக்கைகளைக் கவனியுங்கள். ஒரு பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு, நில அதிர்வுகள் பொதுவாக சிறிது நேரம் நீடிக்கும்" என்று நிலநடுக்கத்துக்கு பிந்தைய தனது பதிவில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in