பீர் பாட்டிலுக்குள் மிதந்த தூசி: டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை

பீர் பாட்டிலுக்குள் மிதந்த தூசி: டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 9வது வீதியில் டாஸ்மாக் கடையில் வாங்கிய பீர் பாட்டிலில் தூசி இருந்ததால் குடிமகன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 9வது வீதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடை மாநகரின் மையப்பகுதியில் உள்ளதால் இங்கு மது விற்பனை படுஜோராக நடக்கும். பல்வேறு தரப்பினரும் இங்கு மது வாங்கிவிட்டு அருகில் உள்ள பாரில் மது அருந்துவார்கள்.

இந்நிலையில் இன்று மதியம் கோவை பெரியகடை வீதி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் இக்கடையில் ஒரு நிறுவனத்தின் பீர் வாங்கி உள்ளார். நண்பர்களுடன் அருகில் உள்ள பாருக்கு சென்று அந்த பீர் பாட்டிலை பார்த்த போது அதில் மிகவும் சிறிய அளவிலான தூசிகள் மிதந்து உள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மணிகண்டன் கூறுகையில், டாஸ்மாக்கை நம்பிதான் மது அருந்த வந்தேன். இப்படி தூசி உள்ள மதுவை அருந்தி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது. பீர் பாட்டிலில் தூசி உள்ளது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான பீர்களை வழங்க வேண்டும், என்றார். இதனால் அக்கடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in