பழநி கோயிலில் துர்க்கா ஸ்டாலின் சாமி தரிசனம்: ரோப் கார் மூலம் மலைக்கு பயணம்!

துர்க்கா ஸ்டாலின்
துர்க்கா ஸ்டாலின்

பழநி முருகன் கோயிலில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்க்கா ஸ்டாலின் இன்று சாமி தரிசனம் செய்தார். இதற்கென ரோப் காரில் மலைக்கு சென்றார் துர்க்கா ஸ்டாலின்.

அறுபடை வீடுகளில் முருகனின் மூன்றாம் படை வீடாக பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் விளங்கி வருகிறது. இங்கு தரிசனம் செய்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்க்கா ஸ்டாலின் பழநிக்கு வந்திருந்தார். அங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த துர்க்கா ஸ்டாலின் பின்னர் கார் மூலம் பழநி கோயிலுக்கு சென்றார்.

பழநி மலையின் அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு ரோப் கார் மூலம் சென்ற துர்க்காவிற்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மலைக்கோயிலில் உள்ள ஆனந்த விநாயகரை வணங்கிய பின்னர் தண்டாயுதபாணி சந்நிதியில் 12 மணிக்கு நடைபெற்ற உச்சிகால பூஜையில் பங்கேற்றார். அங்கு சுவாமி தரிசனம் செய்த துர்க்கா ஸ்டாலின் பின்னர் ரோப் கார் மூலம் கீழே இறங்கினார். முன்னதாக துர்க்கா ஸ்டாலினுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in