கடல் சீற்றத்தால் மூழ்கிய விசைப்படகு: உயிர் தப்பிய தமிழக மீனவர்கள்

மூழ்கிய படகை  மீட்க விரையும் மீனவர்கள்
மூழ்கிய படகை மீட்க விரையும் மீனவர்கள்

சீர்காழி அருகே வானகிரியில் கடல் சீற்றம் காரணமாக 20 லட்சம் மதிப்பிலான விசைப்படகு மூழ்கியது. அதிலிருந்த நான்கு மீனவர்களும்  கடலில்  குதித்து பாதுகாப்பாக கரை சேர்ந்தனர்.  

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த வானகிரி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கு சொந்தமான விசை படகில் பாஸ்கர், இளையராஜா, பிரபு, மாணிக்கம் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் இன்று அதிகாலை  தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். பூம்புகார் துறைமுகத்திற்கு கிழக்கே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் காரணமாக படகு தத்தளித்தது. 

இதனால் நிலை தடுமாறிய விசைப்படகு கடலில் மூழ்கியது. இதனையடுத்து  படகில் இருந்த நான்கு மீனவர்களும் கடலில் குதித்து தத்தளித்தனர். இதனைக்கண்ட மற்ற படகுகளில் இருந்த சக மீனவர்கள் அவர்களை மீட்டு பாதுகாப்பாக கரை சேர்த்தனர். மீனவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வானகிரி மீனவர்கள் மாற்று படகுகள் மற்றும் ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் கடலில் மூழ்கிய 20 லட்சம் மதிப்பிலான விசை படகை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in